என்கடல் பயண கட்டுரை பாகம் II
இது ஒரு விசித்திரமான பயண அனுபவம் அன்று இரவு 7 மணிக்கு தான் எனக்கு ஊருக்கு போக அனுமதி கெடச்சுது ...8 மணிக்கு ஒரு படகு தலைநகர் மாலிக்கு போறாதா ஒரு தகவல் நண்பன் மூலம் வந்திச்சு ..காரணம் அந்த மாதிரி படகு மீன்பிடிக்க தான் பயன் படுத்துவாங்க ...தேவைன்ன பினாயில் கூட குடிக்கலாம் நமக்கு தேவ அதனால் அந்த படகிலயே போக முடிவு பண்ணிட்டேன் ..காரணம் லீவு வேற 30 நாள் தான் உண்டு அதனால இனிமேல் காத்திட்டு இருந்தால் வேலைக்காகாது அப்படின்னு கிடச்ச படகில போலாமுன்னு முடிவு பண்ணித்தான் அந்த படகில போக தயாரானேன் ..படகோட பேரகேட்டபிறகு தான் குலைநடுங்கி போச்சு "டைடானிக்"
சரியா ராத்திரி 8 மணிக்கு போட்டா கேளப்பிட்டான் சாதாரண கப்பல் படக்குன்ன 9 மணி நேரத்தில தலை நகரம் போயிடுவான் இவன் 13 மணி நேரம் ஆகும் அப்படின்னு ஏறும் போதே குண்ட தூக்கி போட்டுட்டான் சரின்னு ஏறி படுக்கலாமுன்னு பார்த்தா படுக்க கூட இடமில்லா சின்ன மீன்பிடி படகு சரின்னு ஏறியாச்சு நடக்குறது நடக்கட்டும் அப்படின்னு உக்காந்துட்டேன் .. வேற ரொம்ப ஆர்ப்பரிப்பா அடிக்குது .கடல் தண்ணி உடம்ப முழுசா நனச்சிரிச்சு சரி இனி தூங்கின மாதிரி தான்னு நினச்சா படகு ஆட்டமுன்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம் நமக்கு வயறு கலங்கி வாய்வழியா குடல் வந்திருமுன்னு பயப்படுற அளவு வாந்தி படுத்திவிட்டது முதல் முறையா படுத்திரிச்சு ...தூக்கமும் இல்ல இருக்கவும் முடியல அப்படி ஒரு அவஸ்தை
.கிட்டத்தட்ட 1 மணி இருக்கும் படகு திடீருன்னு நின்னுரிச்சு ...என்னனு பார்த்த படகுல அதி புத்திசாலி ஒருத்தன் மண்ணெண்ணைக்கு பதிலா தண்ணிய எடுத்து என்ஜினில ஊத்தியிருக்கான் அதனால படகு நின்னுரிச்சு அப்படின்னான் 