Saturday, 12 October 2013

மனமொருமித்தால்

மனது என்பது வாக்கியமல்ல வாழ்க்கை எல்லாமநிதருக்கும் ஒரு மனம் உண்டு ஆனால் அதை நாம் வழிமுறைகள் வகுத்து கொண்டு செல்லும் விதத்தில் இருக்கிறது வாழ்க்கை

Sunday, 14 July 2013

என்கடல் பயண கட்டுரை பாகம் II

என்கடல் பயண கட்டுரை பாகம் II

 

இது  ஒரு விசித்திரமான பயண அனுபவம் அன்று இரவு 7 மணிக்கு தான் எனக்கு ஊருக்கு போக அனுமதி கெடச்சுது ...8 மணிக்கு ஒரு படகு தலைநகர் மாலிக்கு போறாதா  ஒரு தகவல் நண்பன் மூலம் வந்திச்சு ..காரணம் அந்த மாதிரி படகு மீன்பிடிக்க தான் பயன் படுத்துவாங்க ...தேவைன்ன பினாயில் கூட குடிக்கலாம் நமக்கு தேவ அதனால் அந்த படகிலயே போக முடிவு பண்ணிட்டேன் ..காரணம் லீவு வேற 30 நாள் தான் உண்டு அதனால இனிமேல் காத்திட்டு இருந்தால் வேலைக்காகாது அப்படின்னு கிடச்ச படகில போலாமுன்னு முடிவு பண்ணித்தான் அந்த படகில போக தயாரானேன் ..படகோட பேரகேட்டபிறகு தான் குலைநடுங்கி போச்சு "டைடானிக்" 
          சரியா ராத்திரி 8 மணிக்கு போட்டா கேளப்பிட்டான் சாதாரண கப்பல் படக்குன்ன 9 மணி நேரத்தில தலை நகரம் போயிடுவான் இவன் 13 மணி நேரம் ஆகும் அப்படின்னு ஏறும் போதே குண்ட தூக்கி போட்டுட்டான் சரின்னு ஏறி படுக்கலாமுன்னு பார்த்தா படுக்க கூட இடமில்லா சின்ன மீன்பிடி படகு சரின்னு ஏறியாச்சு நடக்குறது நடக்கட்டும் அப்படின்னு உக்காந்துட்டேன் ..  வேற ரொம்ப ஆர்ப்பரிப்பா அடிக்குது .கடல் தண்ணி உடம்ப முழுசா நனச்சிரிச்சு சரி இனி தூங்கின மாதிரி தான்னு நினச்சா படகு ஆட்டமுன்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம் நமக்கு வயறு கலங்கி வாய்வழியா குடல் வந்திருமுன்னு பயப்படுற அளவு வாந்தி படுத்திவிட்டது முதல் முறையா படுத்திரிச்சு ...தூக்கமும் இல்ல இருக்கவும் முடியல அப்படி ஒரு அவஸ்தை
.கிட்டத்தட்ட  1 மணி இருக்கும் படகு திடீருன்னு நின்னுரிச்சு ...என்னனு பார்த்த படகுல அதி புத்திசாலி ஒருத்தன் மண்ணெண்ணைக்கு பதிலா  தண்ணிய எடுத்து என்ஜினில ஊத்தியிருக்கான் அதனால படகு நின்னுரிச்சு   அப்படின்னான் 
நடுக்கடலில தனிமை கடல் தண்ணி வேற உள்ள அடிச்சிட்டே இருந்திச்சு தூக்கமில்லா இரவு அது...அப்போ தான் பாக்கிறேன் அந்த ஆர்ப்பரிக்கிற கடல் அலையில ஒருத்தன் தலையில துண்டபோட்டுக்கிட்டு  நல்லா தூங்குறான் .வாழ்க்கையில முத முதல நனஞ்சுகிட்டே  அபூர்வ மனுஷ பிறவியை கண்டேன் .. அவனால் மட்டும் முடித்து ஆச்சர்யம் ..ஒருவழியா எஞ்சின சரி  பண்ணிட்டு கெழம்பும்போது மணி 3 ஐ தாண்டிடிச்சு .. அப்புறம் கடல் ரொம்ப கொந்தளிச்சிட்டு இருந்திச்சு காரணம் அந்த இடம் அப்படி  பட்ட இடம் ..வாந்திஎடுத்து மயக்கமாகி எப்ப எப்படி தூங்கினேன் என தெரியாமல் தூங்கி  பார்க்கும் போது அதே கடல் அதே தண்ணி ... பசி வேற கண்ண தொறக்க விடாம மூட வச்சிரிச்சு ஒரு வழியா தல நகர் மாலிக்கு வந்து சேர்ந்த போது  மணி மாலை 3 ...கெடச்ச ஹோட்டலுக்கு போய் ரூம்  போட்டு   சாப்பிட்டு விட்டு நிமுரும் போது வாழ்க்கையில மறு  எடுத்த நெனப்பு மறுபடியும் வந்து போகுது ....பயணம் தொடரும்